அனிதா உதீப் விமர்சகர் ஒருவரிடமும் மோதியுள்ளார்

  • 5 years ago
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் மிக மட்டம் என்று பலரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் அனிதா தனது படத்தை விமர்சித்த தயாரிப்பாளர் தனஞ்செயனுடன் ட்விட்டரில் மோதினார். மேலும் விமர்சகர் ஒருவரிடமும் மோதியுள்ளார். 90 எம்.எல். படம் அனைத்து விதத்திலும் தவறு என்று விமர்சித்த பிரசாந்துடன் மோதியுள்ளார் அனிதா. என் படம் பற்றிய உங்களின் அப்பாடக்கர் விமர்சனத்தை கேட்க நிறைய எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால் என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அறிவுரை கிடைத்துள்ளது. குருஜி, திருமணத்திற்கு முன்பு நான் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று சொல்ல முடியுமா? அது சரியா, தவறா? இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு உங்களின் முகவரியை கொடுங்கள். வெயிட்டான கவரை அனுப்பி வைக்கிறேன் என்று அனிதா ட்வீட் செய்தார்.

After Dhananjayan, 90 ML director Anita Udeep had a fight with a reviewer over her movie issue.

#90ML
#AnithaUdeep
#Oviya
#TamilCinemaReview

Recommended