தர்மத்துக்கு இடையூறு நேர்ந்தபோதெல்லாம் அவதாரம் எடுத்து அதை நிலைநாட்டியவர் ஸ்ரீவிஷ்ணு. அப்படி ஒருமுறை பூமிக்கும் அதைத் தாங்கும் பூதேவிக்கும் இடையூறு வந்தபோது ஸ்ரீவரகராக அவதரித்துக் காத்த திருத்தலம் பெரமண்டூர். பூமியை இம்சித்த இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டார் வராகப் பெருமான். அப்போது உக்கிரமான வராக மூர்த்தியை சாந்தப்படுத்த எண்ணிய முனிவர்களும் ரிஷிகளும் மண்டியிட்டு அவருக்கு முன்பாகத் தொழுது வழிபட்டார்கள். அவர்களால் மனம் குளிர்ந்த ஸ்ரீவராகர் பூதேவி சமேதராகக் காட்சி அருளினார்.
பெருமைகள் பல கொண்ட இந்த திவ்ய க்ஷேத்திரத்தில் வாசகர்கள் நலனுக்காக வரும் டிசம்பர் 16 (மார்கழி 1) புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் ஸ்ரீஆதி வராக மூர்த்திக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற உள்ளன. சிறப்பு வழிபாட்டு ஏற்பாடுகளை வாசகர்கள் இந்த லிங்க் பயன்படுத்தி தரிசிக்கலாம்.

Category
🏖
Travel