• 4 years ago
சங்கட ஹர சதுர்த்தி அன்று விநாயகரைக் கட்டாயம் வழிபட வேண்டும். அப்போது பிள்ளையாரைக் கீழ்க்கண்ட பொருள்களால் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். இதோ அந்த விவரங்கள் உங்களுக்காக...

மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
குங்குமப் பிள்ளையார் - செவ்வாய் தோஷம் அகலும். புற்று மண் பிள்ளையார் - நோய்கள் அகலும். வெல்லப் பிள்ளையார் - இனிமையான வாழ்வு. உப்புப் பிள்ளையார் - எதிரிகளின் தொல்லை நீங்கும். வெண்ணெய் பிள்ளையார் - அச்சங்கள் நீங்கும். விபூதி பிள்ளையார் - ஞானமும் முக்தியும் கிட்டும். சந்தனப் பிள்ளையார் - சந்தானப் பேறு. சாணப் பிள்ளையார் - சகல தோஷ நிவர்த்தி. வாழைப் பழப் பிள்ளையார் - வம்ச பாதுகாப்பு. அரிசி மாவுப் பிள்ளையார் - கடன் நீங்கும். சர்க்கரைப் பிள்ளையார் - செல்வம் சேரும். மலரால் பிள்ளையார் - மாங்கல்ய பலம். அரச இலை பிள்ளையார் - வெற்றி தருவார். களிமண் பிள்ளையார் - காரிய ஸித்தி. தேன் கலந்த தினைப் பிள்ளையார் - உயர்ந்த வரன் அளிப்பார்.

வழிபட உகந்த பொருள்கள்
கடன் தீர – மாவிலை, இன்பம் பெறுக – வில்வம், இல்வாழ்க்கை சிறக்க – கரிசலாங்கண்ணி, கல்வியில் மேன்மை - இலந்தை இலை, சிக்கல்கள் தீர – ஊமத்தை, வசீகரம் பெற – நாயுருவி, துணிச்சல் பெற – கண்டங்கத்தரி, வெற்றி பெற – அரளி இலை, உயர்பதவி கிடைக்க – அரசு இலை, திருமணத்தடை விலக – தவனம், எண்ணியவை ஈடேற – மரிக்கொழுந்து, செல்வச் செழிப்பு பெற – நெல்லி, குழந்தை வரம் பெற – மருதம், நோய் அகல – அகத்தி, சொந்த வீடு – ஜாதி மல்லி, தன்னம்பிக்கை பெற – துளசி, நீங்காத புகழ் பெற – மாதுளை, வம்ச விருத்தி – எருக்கு, சகல சௌபாக்கியம் பெற – அறுகம்புல், நீண்ட ஆயுள் – தேவதாரு, முக்தி – வன்னி

Recommended