வணக்கம் சொல்வது தமிழர் முறையே அல்ல ஆரிய வழியில் வந்தது. ஒருவருக்கொருவர் ஏன் வணக்கம் சொல்ல வேண்டும், வாழ்த்து தான் சொல்ல வேண்டும் என்று சுயமரியாதையை விதைத்தவர் மறைந்த தமிழறிஞர் மா.நன்னன்.
தமிழை தனது முழுமூச்சாக நினைத்து வாழ்ந்து வந்தவர் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன். மக்களிடத்தில் தமிழை எளிய நடையில் கொண்டு சேர்ப்பதில் இறுதி வரை செயல்பட்டு வந்தவர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளானாலும், நிகழ்ச்சியில் பேரூரையானாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சுகள் இடம்பெற்றிருந்தன.பெரியாரின் சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருந்த அவரின் பேச்சுகள் சுயமரியாதையை காப்பதாகவும் இருந்தது. நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது தமிழர் பாரம்பரியம் என்று கூட நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது தவறு என்று உரக்கச் சொன்னர் பேராசிரியர் , நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்கிறோம். அது தவறு, வணக்கம் சொல்வது முட்டாள்தனம், தமிழர் வரலாற்றில் எங்குமே வணக்கம் என்ற குறிப்பே கிடையாது. சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது கூட மக்கள் அனைவரும் வாழ்த்து தான் சொன்னார்களேத் தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ' அதாவது வாழ்க அரசர் என்று தான் சொன்னார்கள்.
Tamil Scholar Nannan said that saying Vanakkam to eah other is not Tamilian's culture and it is all foolishness, congragulating is only in the Tamil culture he added.

Category
🗞
News