• 6 years ago
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததாக விஜயேந்திரருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதியும் இதுபோல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தார் என்றும் தேசிய கீதத்துக்கு மரியாதை தந்தார் என்றும் சொல்லாமல் கூறும் இரு வீடியோக்களை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்கவில்லை என்றும் தமிழ் மொழியை அவமதித்துவிட்டு தேசிய கீதத்துக்கு மட்டும் அவர் எழுந்து நின்றார் என்றும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

BJP National Secretary H.Raja tweets that Karunanidhi was also not standing for Tamil Thaai Vazhthu in the World Classical Tamil Conference 2010.

Category

🗞
News

Recommended