• 8 years ago
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். கார்த்திக், ரம்யாகிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் வெளியானதுமே, இப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் காப்பி எனக் கூறப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறி வருகிறார்கள். 'ஸ்பெஷல் 26' கதையை இப்போது பார்க்கலாம். பிறகு, காப்பியா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... பாலிவுட்டில் நீரஜ் பாண்டே இயக்கிய படம் 'ஸ்பெஷல் 26'. இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாயி, ஜிம்மி ஷெர்கில் ஆகியோர் நடித்திருப்பார்கள். 2013-ல் வெளிவந்து வசூலைக் குவித்த இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைத் தனது நேர்த்தியான திரைக்கதையால் ரசிக்கவைத்திருப்பார் நீரஜ் 1987-ம் வருடத்தில் 26 பேர் கொண்ட குழுவினர் சி.பி.ஐ அதிகாரிகளைப் போல நடித்து மும்பையில் இருக்கும் பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளை அடித்தனர். பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் ஆகியவை கொள்ளை போயின. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தான் 'ஸ்பெஷல் 26' படமாக உருவானது.

'Thaana serndha koottam' film's teaser was released yesterday evening. This film is directed by Vignesh Shivan. TSK film is said to be a copy of the super hit film 'Special 26' in Bollywood.Many of the people said that this film is a blatant copy. Let's see the 'Special 26' story now.

Recommended