• 7 years ago
இயக்குனர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் 'எக்ஸ் வீடியோஸ்'. தமிழ், இந்தியில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிகா ஷான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் சஜோ சுந்தர், "தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது. இது ஆபாசப் படம் அல்ல.. ஆபாசமான உலகம் குறித்து நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

'X Videos' movie directed by Hari's assistant Sajo Sundar. This film got 'A' certificate by the sensor board.

Category

🗞
News

Recommended