• 8 years ago
அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பெயர் வைக்கப்படவுள்ளது.
உலகளவில் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் 1953ல், அட்லாண்டிக் கடற்பகுதியில் துவங்கியது. உலக வானிலை அமைப்பு மூலம் கடல்களின் அடிப்படையில், அவற்றை சார்ந்த நாடுகளை இணைத்து புயல்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
வட இந்திய பெருங்கடலின் பட்டியலில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், மாலத்தீவு, ஏமன், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் சார்பில், 2014ல், ஒவ்வொரு நாடும் தலா எட்டு வீதம் 64 பெயர்களை பதிவு செய்துள்ளன.இதுவரை, 49 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியபெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, ஆங்கில எழுத்துகளின், ஏ, பி, சி, அகர வரிசையில், முதலில், பங்களாதேஷ் என்ற வங்கதேசம் வழங்கிய பெயர் வைக்கப்படும்.

பிறகு வரிசையே இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, கடைசியில், தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் வைக்கப்படும். கடைசியாக உருவான புயலுக்கு வங்கதேசம் அளித்த ஓகி பெயர் சூட்டப்பட்டது.

இந்தப்புயல் கடலில் இருந்தபடியே தென் தமிழகம், தெற்கு கேரளா மற்றும் லட்சத்தீவுபகுதிகளை சின்னாபின்னமாக்கியது. ஓகி புயலால் கொட்டித்தீர்த்த மழையால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளக்காடானது.


The next cyclone name will be Sagar. India has selected this name. This is the 50th cyclone name in the list.

Category

🗞
News

Recommended