• 7 years ago
நாளைய தினம் ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பின்னர் வானத்தில் நிகழ உள்ள அபூர்வ நிகழ்வாகும். கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம். சூரியன் மற்றும் சந்திரனுக்கு நடுவில் பூமி வருவதும், இதனால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதும் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 31ஆம் தேதியன்று சந்திரன் சிவப்பாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இது ரத்த நிலவு (ப்ளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது குழந்தைகள், கர்ப்பினிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி.

கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


Do's and don'ts during the Chandra Grahan.Lunar eclipse is formed when earth comes in between sun and moon and the shadow of the earth falls on the moon.

Recommended