• 8 years ago
மோடி கடந்த திங்கள் கிழமை ‘தினத்தந்தி’யின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்திருந்தார். அப்போது தான் திடீரென்று உடல் நிலை தேறிவரும் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் மோடி, ஒரு கல்யாணத்திற்கு சென்றார் என்று மட்டும் தெரியும்..ஆனால் அவர் யார் கல்யாணத்திற்கு சென்றார் என்று பலருக்கும் தெரியவில்லை....இருப்பினும் அவர் சென்று வந்த கல்யாண வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
கடந்த திங்கள் கிழமை, கருணாநிதியை சந்திக்கச் செல்லும் முன்பாக
எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற, பிரதமர் அலுவலக இணை செயலர் டி.வி.சோமநாதன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று இருக்கிறார்.

தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் டி.வி.எஸ்., என்று அழைக்கப்படும் டி.வி.சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.சோமநாதன் சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட அதிகாரி. தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றியவர். சென்னை மெட்ரோ ரயிலுக்கு வித்திட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர். உலக வங்கியில் முக்கிய பணியிடத்தில் பணியாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் இணைச் செயலாளராக செயலாற்றியவர்.
தமிழகத்தின் பல்வேறு அரசு ரீதியான நகர்வுகளுக்கு சோமநாதனும் ஒரு காரணி என்று கூறப்படும் நிலையில், அவரது இல்லத் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதனால், இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் பாரபட்சம் இல்லாமல் டி.வி.எஸ்., உடன் நெருக்கம் காட்டிக் கொள்ள பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

modi, R.A. Puram to took part in the marriage function of the daughter of T.V. Somanathan, joint secretary in the Prime Minister's office.

Category

🗞
News

Recommended