• 8 years ago
2018ஆம் வருடத்திற்கான அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இப்படி நிறம் அறிவிக்கப்படும். அதேபோல் இந்த முறையும் டிசம்பரில் அடுத்த வருடத்திற்கான நிறம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் 'பேண்டோன்' என்ற நிறுவனம் இப்படி நிறம் அறிவிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறது. 2010ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. 2018ம் வருடத்தின் அதிகாரப்பூர்வ் நிறம் என்ன என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்த போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, வித்தியாசமான விளக்கத்தை அந்த நிறுவனம் கொடுத்து இருக்கிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 'பேண்டோன்' என்ற நிறுவனம் ஒன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது. வண்ணங்கள் சம்பந்தமான நிறைய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மேலும் பெயிண்டில் தொடங்கி எழுதும் கலர் பென்சில்கள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை இந்த அமைப்பு வெளியிடும். கடந்த 2010ல் இருந்து வழக்கத்தை கொண்டு இருக்கிறது.

Pantone announced the official colour for year 2018. It declared Purple as the official colour for 2018. Green is the actual official colour for 2017.

Category

🗞
News

Recommended