• 8 years ago
2017ஆம் ஆண்டு முடிந்து 2018ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

ஆங்கில புத்தாண்டு மிதுனம் ராசி மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கன்னி லக்னம் இரண்டாம் இடமான துலாமில் குரு, செவ்வாய் 3ஆம் இடமான விருச்சிகத்தில் புதன். தனுசு ராசியில் சூரியன்,சனி, சுக்கிரன், மகரத்தில் கேது, கடகத்தில் ராகு என கிரகங்கள் அமர்ந்துள்ளன.

2018ஆம் ஆண்டு சனி, ராகு, கேது கிரகங்கள் அதே நிலையில்தான் அமர்ந்திருக்கும். குரு பெயர்ச்சி அக்டோபர் 18ஆம் தேதி நிகழ உள்ளது. இதை வைத்தும், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கோள்களின் கிரக பெயர்ச்சியை வைத்தும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.பாசத்திற்கும் அன்புக்கும் அடிபணியும் மேஷ ராசிக்காரர்களே! நீங்க பாசத்திற்கு முன்னாடி பனியாக இருந்தாலும் பகை என்று வந்தால் புலியாக மாறி விடுவீர்கள். காரணம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான்தான். மனித நேயம் கொண்ட நீங்கள், உடல் உழைப்பில் சூரப்புலி. சாதனையாளராக திகழும் உங்களுக்கு இருந்த கஷ்ட காலம் கடந்த ஆண்டோடு கடந்து விட்டது. 2018 இனி பொற்காலமாக அமையப்போகிறது. ராசிநாதன் செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். 7ஆம் இடத்தில் அமர்ந்துள்ள குருபகவானால் குதூகலம்தான். உங்களுக்கு பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். 9ஆம் இடத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் வெளி வட்டார நட்பு சிறப்பாக அமையும். பாஸ்போர்ட், விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ராசி அதிபதி செவ்வாய் வருடத்தின் மத்தியில் ஆரம்பித்து இறுதி வரைக்கும் 10ஆம் வீடான மகரத்தில் கேதுவுடன் இணைகிறார் இது ராசிநாதனுக்கு உச்ச வீடு என்பதால் நன்மைகள் அதிகரிக்கும். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி வர நன்மைகள் நடக்கும்.



The following articles for each of the Zodiac signs tells you about the various transits that are going to take place during 2018 and the impact they will have on your life. For instance, the Aries Horoscope 2018 suggests that you will have to really persevere in your efforts to achieve your goals, while the Gemini 2018 Horoscope

Category

🗞
News

Recommended