இந்த வெற்றியால் நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இமாசல பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா தற்போது 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று 6வது முறையாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்கிறது. அதே போல் இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
இரு மாநில வெற்றியை பாஜக தொண்டரகள் கொண்டாடி வருகின்றனர். 11 மணிக்கே வெற்றிச்சின்னத்தை காட்டி மகிழ்ச்சியோடு நாடாளுமன்றத்திற்குள் சென்றார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கேட்டுள்ளதாவது, அன்பான பிரதமரே, வெற்றி பெற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனால் இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்பிற்குரியவரே, வாழ்த்துக்கள்.. ஆனால் குஜராத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக தாங்கள் கூறியது என்னவானது? நிலைமை இன்னதென்பதை இப்போதாவது அறிந்தீர்களா? இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
Dear prime minster, Congratulations for the victory... but are you really happy ask actor Prakash Raj.

Category
🗞
News