• 8 years ago
பூமியை கடந்து சென்ற வித்தியாசமான விண்கல் குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த விண்கல் சரியாக ஒரு வாரத்திற்கு முன் பூமிக்கு அருகில் வந்தது. இன்னும் இந்த விண்கல் பூமியை முழுதாக தாண்டி செல்லாத நிலையில் தற்போது இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய அந்த ரஷ்ய தொழிலதிபர் முடிவு செய்து இருக்கிறார். அந்த விண்கலத்தில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.

சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருக்கிறது.

இந்த நிலையில் இந்த விண்கலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன்படி இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு 'ஒமுஅவுமா' என்று பெயர் வைத்தார்கள். மேலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கினார்கள். மேலும் இந்த விண்கல் இன்னும் சில தினங்களில் மொத்தமாக பூமியை கடந்து சென்றுவிடும் என்பதால் இதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.





A Russia millionaire spends 650 crore for alien research. He spends this money to research the cigar-shaped asteroid, named 'Oumuamua by its discoverers which croses earth an week ago.

Category

🗞
News

Recommended