• 7 years ago
சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கொட்டும் பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பகுதி பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி.மீ.க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. சஹாரா பாலைவனம் என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய ஹாட் பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும்.

வடக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள இதன் பரப்பளவு 90 லட்சம் சதுர கிலோமீட்டர்களாகும். இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும்.
ந்த சஹாரா பாலைவனத்தில் எப்போதும் அனல் காற்றும் புழுதி புயலும் வீசி வரும். இது ஒரு சிவப்பு பாலைவனமாகும்.
இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் அய்ன்செஃப்ரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் ஞாயிற்றுக் கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

Snow falls in Sahara desert. snow covers in sahara desert. More than 15 inches has blanketed sand dunes across the small town of Ain Sefra, Algeria. It is the second time snow has hit in nearly 40 years, with a dusting also recorded in December 2016.

Category

🗞
News

Recommended