• 7 years ago
தெர்மாமீட்டரில் அளவிடுவதற்கு கூட வழியில்லாத அளவிற்கு ரஷ்யாவின் யாகுதியாவில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. யாகுதியாவில் அதிக அளவாக மைனஸ் 67 டிகிரி வெப்பநிலை பதிவாக எஞ்சிய பகுதிகளில் மைனஸ் 88.6 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 3,300 மைல் தொலைவில் உள்ளது யாகுதியா பகுதி. இங்கு சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர், அன்றாட இந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்கள் மைனஸ் 40 டிகிரி உறைநிலையிலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் மிகக் குறைந்த அளவே வெப்பநிலை பதிவானதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்கும்படி காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக் கொண்டனர்.

புவியிலே மிகுந்த குளிர் பிரதேசமான ஓய்மகான் கிராமத்தில் வெப்பநிலையை பதிவு செய்ய முடியாத அளவிற்கு தெர்மாமீட்டர் அளவுகோலுக்கு கீழே வெப்ப நிலை சென்று விட்டதாக ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் ஓய்மகானில் மைனஸ் 98 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த வாரத்தில் இரண்டு பேர் இறந்துள்ளார். காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் பகுதானதால் வெளியே இறங்கி அருகில் இருந்த பார்மிற்கு செல்வதற்குள் பனியில் உறைந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.



moscow, snow, பனி English summary Russia's Yakutia region registers freezing snowfall upto minus 67 degree and the college students selfie whicch freeze even the eyelash too is going viral in social media

Category

🗞
News

Recommended