• 7 years ago
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் தமிழக விஞ்ஞானி டாக்டர் கே சிவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராம மக்களும், விஞ்ஞானின் சிவனின் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கே.சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஜனவரி 12ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற ஏ.எஸ்.கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, கே.சிவன் இந்த பதவியை ஏற்கவுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.

விஞ்ஞானி கே.சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கைலாசவடிவு நாடார், தாயார் செல்லம். சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார். வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு வரை படித்தார்.

Scientist Dr K Sivan has been appointed as new chairman of Indian Space Research Organisation.He graduated from the Madras Institute of Technology in aeronautical engineering in 1980 and completed Master of Engineering in Aerospace engineering from IISc, Bangalore two years later.

Category

🗞
News

Recommended