• 7 years ago
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சட்டசபைக்கு வந்தாலே தனி அட்ராக்சன்தான். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளான இன்று ஸ்டைல் ஐகானாக வலம் வந்தார் விஜயதாரணி. விளவங்கோடு சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ விஜயதாரணி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று எதிராளிகளை வார்த்தைகளில் தடுமாற வைப்பார். விஜயதாரணியை அவர் தொகுதி வாக்காளர்களே மேக் அப் ராணியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டும் அளவிற்கு பிரபலமாக வலம் வந்தனர்.

விஜயதாரணி முன்பெல்லாம் வகிடு எடுத்து வாரிய தலை, கண்ணுக்கு மை, லிப்ஸ் டிக் என சட்டசபைக்கு வருவார். இந்த முறை லூஸ் ஹேர், முழு கை வைத்த பிளவுஸ், லூஸ் ஹேர், கையில் ஸ்டைலாக ஹேண்ட் பேக் என அவை நடவடிக்கையில் பங்கேற்க வந்தார்.
விஜயதாரணியை பார்த்த உடனேயே கேமராவின் கண்கள் அவர் பக்கம் திரும்பின. அதைப்பார்த்து அவருக்கே வெட்கம் வந்திருக்கும் போல லேசாக குனிந்து கொண்டார். ஆனாலும் விடாமல் அவரை படம் பிடித்தனர்.

Congress MLA Vijaya Dharani has become the style icon of the TN Assembly as she is always comes to the assembly in a designer avatar.

Category

🗞
News

Recommended