• 7 years ago
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து நதியா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடிக்கிறார். ஷில்பா கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஓரிரு நாட்கள் படப்பிடிப்புக்கும் வந்துள்ளார். அதன் பிறகு அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். தான் கொடூர வில்லியாக நடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே அவர் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. முதலில் தனது கதாபாத்திரம் குறித்து முழுவதும் கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

Nadhiya opted out of Vijay Sethupathy's new movie super deluxe. She did not know she have to playing a bad villain character and after getting to know how strong and evil the character is, she opted not to act in the movie. Ramya Krishnan has been confirmed to act instead of nadhiya..

Category

🗞
News

Recommended