• 6 years ago
சூர்யா, கமலி காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு, இருவருக்கும் வேறு வேறு இடங்களில் திருமண ஏற்பாடு, இதற்கிடையே சூர்யாவின் அம்மாவிற்கு திடீர் ஹார்ட் அட்டாக், சூர்யா-கமலி திடீர் திருமணம் என பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே சீரியலின் அதிரடி திருப்பங்களால் சுவாரஸ்யமான ரசிகர்களுக்கு, நேற்று திடீர் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது நாதஸ்வரம் ஸ்ரித்திகாவின் திடீர் வரவு. சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் இனி இவர் தான் நடிக்க இருக்கிறார். முன்பு சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவரே நன்கு இளமையுடன் தான் இருந்தார். இந்நிலையில், சூர்யாவுக்கு தங்கை என்று சொன்னால் நம்பி விடலாம் என்றிருக்கும் 31 வயது ஸ்ரித்திகாவை, சூர்யாவுக்கு அம்மாவாக்கி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு முன்பு சூர்யாவின் அம்மாவாக நடித்தவர் தனி மிடுக்கோடு காணப்பட்டார். அந்த மிடுக்கான தோற்றம், மென்மையான ஸ்ரித்திகாவிடம் தொடருமா என்பது சந்தேகமே. எனவே, ஸ்ரித்திகாவின் இந்த திடீர் வரவு இனி வரும் காட்சிகளில் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


The 31 years old actress Srithika is playing the mother role for a 25 year old young man in vijay Tv's Kalyanamam kalyanam serial. Tamil serial actress Srithika acts as surya's mother in vijay tv kalyanamaam kalyaanam serial.


#srithika #kalyanamaamkalyanam #vijaytv

Category

📺
TV

Recommended