சமுத்திரகனி - சசிகுமார்... நாடோடிகள் 2

  • 6 years ago
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்தது. அந்த படத்தின் வெற்றி, நாடோடிகள் என்ற பெயரில் தனி நிறுவனத்தையே தொடங்க வைத்தது சமுத்திரகனியை. மீண்டும் சமுத்திரகனி - சசிகுமார் கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு நாடோடிகள் 2 என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏஎல் ரமேஷ். தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

Samuthirakani, Sasikumar will join again for Nadodigal 2 movie

Category

🗞
News

Recommended