திருச்சியில் காவல் துறை ஆய்வாளரால் எட்டி உதைத்து கொல்லப்பட்ட உஷா கர்ப்பிணி இல்லை என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் கடந்த 7-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
பின்னால் வந்த வேன் ஏறியதில்உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். உஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று ராஜா தெரிவித்தார். கர்ப்பிணியை எட்டி உதைத்த செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
Trichy Usha who dis when a SI kicks of the two wheeler she travels. Sources says that She was pregnant for 3 months. But her postmorem report says that she was not pregnant.
Category
🗞
News