உயிரைப் பறிக்கும் காசநோயால் அவஸ்தைப்பட்ட பிரபலங்கள்! | Boldsky

  • 6 years ago
காசநோய் என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தீவிரமான ஒரு பாக்டீரிய தொற்று நோய் ஆகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. அதுவும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல் அல்லது தும்மலின் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். இது மிகவும் கொடிய உயிரைப் பறிக்கும் நோய். பெரும்பாலான காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்களுக்கு இருப்பது காசநோய் என்றே தெரியாது. ஏனெனில் இது ஆரம்பத்தில் சாதாரண இருமலாகத் தான் இருக்கும்.

உலகிலேயே மிக அதிக ஒரு தொற்றுக் கொல்லி நோயாக இருப்பது காச நோய் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் படி, கடந்த வருடம் 10.4 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர்.இந்த காசநோயால் சாதாரண மக்கள் மட்டும் அவஸ்தைப்படுவதில்லை. சில பிரபலங்களும், தலைவர்களும் தான் காசநோயால் அவஸ்தைப்பட்டனர்.

Recommended