• 7 years ago

ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தோண்ட தோண்ட பழமையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவு நீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டும் போது பணிகள் நேற்று நடைபெற்றன. அப்போது 3 அடி ஆழத்தில் தோண்டிய போது ஒரு இரும்புப் பெட்டி கிடைத்தது. இது புதையலாக இருக்கும் என சந்தேகித்த எடிசன் போலீஸாரிடம் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து ஆய்வு நடத்தினர்.



5000 bullets and explosives unearthed in Rameswaram while a fisherman digs in their back side of his house for building septic tank.

Category

🗞
News

Recommended