• 6 years ago

விண்ணின் மேன்மை துறந்து
மண்ணிற்கு வந்த மகிபனே
பாவத்தை பரிகசிக்க வந்த உன்னை
பாழான லோகம் பரிகாசம் செய்தது
ஆரவாரத்தோடு வரவேற்க வேண்டிய அரசனை
ஆணிகள் அடித்து துன்புறுத்தியது
சிரம் தாழ்த்தி வணங்க வேண்டிய உன்னை
சிலுவையை தூக்கி சுமக்க வைத்தது
பாவியை பரமனிடம் சேர்க்க
பலியாக்கினீர் உம்மை பரிகாரியாக
சீக்கிரம் வரப்போகும் உம்மை சந்திக்க
சிலுவையோடு காத்திருக்கிறேன்
உம் சீஷனாக

Category

🎵
Music

Recommended