• 5 years ago
தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை

மந்தைவிட்டு போனேன்
கந்தையோடு நின்னேன்
அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்

உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்

என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரியக் கண்டேன்

அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை

Category

🎵
Music

Recommended