முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டு வருகிறார். அண்மையில் தம்மை சந்தித்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அவர் தந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் முக என கையெழுத்திட்டு கருணாநிதி கொடுத்தனுப்பியது திமுக தொண்டர்களையும் அவரது ஆதரவாளர்களையும் பெரும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. உடல்நலம் தேறிவரும் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அண்மையில் இடதுசாரித் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன் உள்ளிட்டோர் கருணாநிதியைச் சந்தித்திருந்தனர். இந்நிலையில் தற்போதைய உடல்நிலையிலும் தெளிவாக முக என கருணாநிதி கையெழுத்திட்டு கொடுத்திருக்க செய்தி திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மாகவிஞர் ஈரோடு தமிழன்பன், அண்மையில் கலைஞரை சந்திக்கச் சென்றார். கவிஞரைப் பார்த்ததுமே கலைஞர் தன் கையைஉயர்த்தி அவரை வரவேற்றார்.
The DMK president M Karunanidhi is fine and recovering well,” said Poet Arur Thamizhnaadan.

Category
🗞
News