• 7 years ago
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் உள்ளது என்கிறது இந்தியா டுடே ஊடகம் நடத்திய ஆய்வு. நாட்டிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ள முதல் 5 மாநிலங்கள் எவை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வர்த்தக தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராதான். தொழில்வளமும், வேளாண் வளமும் கொண்ட இந்த மாநிலம்தான் பட்டியலில் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.16.6 லட்சம் கோடிகளாக உள்ளது. 2வது இடத்தில் இருப்பது தமிழ்நாடு. தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.9.48 லட்சம் கோடியாகும்.

3வது இடத்தை உத்தர பிரதேசத்துடன் இணைந்து பெறுகிறது குஜராத். இரு மாநிலங்களின் ஜிடிபி ரூ.9.2 லட்சம் கோடியாகும். கர்நாடகா ரூ.8.14 லட்சம் கோடியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவீதம் பங்கு வகிக்கின்றன என்பது சிறப்பு. 2015-16ம் ஆண்டின் பொருளாதார புள்ளி விவர அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

These 5 states including Tamilnadu accounts for 46 percent of the national GDP.

Category

🗞
News

Recommended