அதிமுக, திமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கப் போகும் நடிகர் கமல்ஹாசன்தான் என்று தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் கருத்துக்கூறியுள்ளனர். நியூஸ் 7 தொலைக்காட்சி நடத்திய மக்கள் மனசுல யாரு என்ற கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.
சினிமாவில் இருந்து இன்னொரு முதல்வர் வருவாரா என்ற கேள்விக்கு ஆம் என்று 31.6% பேரும் இல்லை என்று 20.2% பேரும் உறுதியாக கூற முடியாது என்று 27.8% பேரும் வேண்டவே வேண்டாம் என்று 20.4% பேரும் கருத்து கூறியுள்ளனர்.
கமல் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு அதிகம் சவாலாக இருப்பார் என மக்கள் கருத்து கூறியுள்ளனர். திமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கப்போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்: கமல் - 35.5% ரஜினி - 22.8% விஜய் - 16.5% மற்றவர்கள் 25.2% என மக்கள் கருத்து கூறியுள்ளனர்.
அதிமுகவிற்கு அதிகம் சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் கூறிய கருத்து: கமல் - 45.3% ரஜினி - 18.2% விஜய் - 14.5% மற்றவர்கள் - 22% அதிமுகவிற்கு கமல்தான் அதிகம் சவாலாக இருப்பார் என 45.3 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
News 7 TV survey has said that Actor Kamal Haasan will be a big challenge to both ADMK and

Category
🗞
News