100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'

  • 6 years ago
சூப்பர் ஹிட்டாக வேண்டிய மெர்சல் திரைப்படத்தை மெகா ஹிட் ஆக்கியது சர்ச்சைகள் தான். பத்மாவத் படத்திற்கும் அப்படிதான் நடந்துள்ளது. பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர் தீ வைக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தனர். ஆனால், படம் அதையும் தாண்டி ரிலீஸ் ஆனது. கடும் எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து ரூ.100 கோடி கிளப்பில் எளிதாக நுழைகிறது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனா, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் கூட்டணியில் உருவான பத்மாவத் திரைப்படத்துக்கு படப்பிடிப்பு காலத்திலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கடும் கண்டனத்துக்கு உள்ளானார். படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியை தெய்வத்துக்கு நிகராக காட்டப்பட்டிருக்கிற செய்தி அறிந்து போராட்டங்கள் குறைந்துள்ளன. படம் வசூலை குவிப்பதால் முதலில் திரையிடத் தயங்கிய தியேட்டர்காரர்கள், இப்போது படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். பத்மாவத் அமெரிக்காவில் 4.5 மில்லியன் டாலர் வசூல் செய்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து இந்திய படங்களிலேயே மிகப்பெரும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

Padmaavat collection is more than Tamil films release with Padmaavat in Tamilnadu. Padmaavat, which collects more than 100 crores in India, joins 100 crore club this evening.

Category

🗞
News

Recommended