• 7 years ago

திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார். எச். ராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் தொடர்ந்து ஆட்சி செய்வதை கொண்டாடும் விதமாக 2013ல் லெனின் சிலையை நிறுவினர். ஆனால் பாஜக ஆட்சியை கைப்பற்றிய இரண்டாவது நாளே மார்க்சிஸ்ட் ஆட்சியின் தொடர் வெற்றி அடையாளமான லெனினின் சிலையை அகற்றியுள்ளனர்.

H.Raja criticises Lenin statue damaged in Tripura with that tomorrow Periyar statue will be broken in Tamilnadu.

Category

🗞
News

Recommended