• 7 years ago
விடுதலைப் போராட்ட வீரர் வீர சவார்க்கரால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தீரமிக்க புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் 1925-ம் ஆண்டு இதேநாளில்தான் பாபநாசம் பாணதீர்த்த அருவி சுழலில் சிக்கி காலமானார். சிலர் ஜூன் 3-ந் தேதி காலமானார் எனவும் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர்களை அஞ்சி நடுங்க வைத்த விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் வ.வே.சு.ஐயர். 1881-ம் ஆண்டு திருச்சி வரகனேரியில் பிறந்தார் வ.வே.சுப்பிரமணியம் ஐயர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்ற வ.வே.சு. ஐயர், சென்னை மாகாணத்தின் முதல் மாணவராக தேர்வானார். வழக்கறிஞராக பணிபுரிந்த வ.வே.சு. ஐயர் பன்மொழி வித்தகராக திகழ்ந்தார்.

Category

🗞
News

Recommended