• 8 years ago
பாலிவுட்டை தனது கைக்குள் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கோலிவுட்டை தனது கைக்குள் வைத்திருக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அன்புச்செழியன்' சினிமாத்துறையில் இந்த பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லையாம். சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளருமான அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர்.

அன்புச்செழியனின் கொடுத்த நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் அசோக்குமார் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சினிமாத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் இன்று அன்புச்செழியனின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு கேட்ட நேரத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வரும் சினிமா பைனான்சியர்.

Cinema Financier Anbuchezhiyan wanted to control kollywood like Dawood ibrahim in Bollywood. He is the reason for the death of GV and now Ashok kumar.

Category

🗞
News

Recommended