• 8 years ago
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு குணம் உண்டு. நெருப்பு, நிலம், காற்று, நீர் என நான்கு வகையாக 12 ராசிகளும் பிரிக்கப்பட்டுள்ளது. ராசிகளின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்கு கோபம், டென்சன், மன அழுத்தம் வரும். ஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா?. 'கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்பார்கள். எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் ஏதாவது காரணத்திற்காக டென்சன் அடைவார்கள்.
எந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் கோபம் கொள்வார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களை எப்படி கூல் செய்து காரியம் சாதிப்பது என்று அறிந்து கொள்வோம்.
சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி. சினம் கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும். தமிழ் வருடங்கள் அறுபதையும படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சனைக்கு தீர்வுகாண தரிசிக்க வேண்டிய தலம் இது. அதே போல நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புங்கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது இங்கும் சென்று வரலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளம் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம் இங்கு சென்று தரிசித்தால் கோபம் விலகி முகத்தில் புன்னகை மலரும்.

Everyone gets angry from time to time; we as humans can’t help but lose our temper or patience every once in a while. Maybe certain things get under your skin, like when someone mentions a touchy subject or teases you about something that you feel embarrassed or hurt about. Anger can get the best of you if you don’t know how to reign it in, however, and each zodiac sign expresses their anger a bit differently.

Recommended