• 8 years ago
கும்பம் ராசியில் பிறந்த குழந்தைகள் சிறந்த புத்திசாலிகளாக இருப்பதோடு, கருணையும் இரக்கமும் கொண்டவர்கள். அறிவியல் துறையில் சாதிப்பார்கள்.
குடத்தின் அமைப்பைக் குறிப்பது கும்பம். நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே இருப்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல் வைத்திருப்பார்கள். தூண்டுகோல் இருந்தால்தான் துலங்குவார்கள். இல்லையெனில் உள்ளேயே விஷயங்களை வைத்துக் கொண்டு தவிப்பார்கள்.
கும்பம் ராசி ஆண் ராசி. ஸ்திர ராசி. காற்று ராசியும்கூட. இதற்கும் அதிபதி சனிதான்.
கும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. இந்த வீடு சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருக்குப் பகை வீடு.அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். இந்த குழந்தைகளிடத்தில் பல ஆற்றல்கள் குவிந்து கிடக்கும். பொய் சொல்லக் கூடாது. பித்தலாட்டம் கூடாது. நேர்மையா உழைச்சு சம்பாதிக்கணும் என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்கள்.கும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உயரமானவர்கள்,மெல்லிய உடல் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்கள். பிறை போன்ற நெற்றியை கொண்டவர்கள். இவர்களின் கன்னம் ரோஸ் நிறத்தில் பளிச்சிடும். அழகான கண்கள், புருவங்களைக் கொண்டவர்கள். செதுக்கியது போன்ற மூக்கு, குவிந்த உதடுகள் கொண்டவர்கள். சிலரது தோற்றம் மாநிறம் கொண்டவர்கள். தொப்பை வயிறும், பின்புறம் பருத்து காணப்படும்.


Know all about the Aquarius kids in Tamil. Read about children who belongs to zodiac sign Aquarius in Child Astrology here.

Category

🗞
News

Recommended