• 6 years ago
ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் .ராஜா தமிழ் மொழியே இருக்க கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம் என்றும் தமிழ் மொழியை சனியனே என்று பெரியார் பேசியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசைபாடுகிறார்கள் என்றும் எச் .ராஜா தெரிவித்துள்ளார்.முன்னதாக திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும் என எச் ராஜா தனது முகநூலில் பதிவு செய்தத்தில் எழுந்த சர்ச்சை ஓயாத நிலையில் தற்போது மீண்டும் எச் ராஜா பெரியார் குறித்து பேசியுள்ளது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக உள்ளது.

Category

🗞
News

Recommended