• 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 06

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொருள் :
ஐம்பொறி ஆசைகளை விட்டொழித்து இறைவனை
பற்றுபவர் நிலைத்தபுகழ் பெறுவர்.

விளக்கம்:
மெய்,வாய் ,கண்,மூக்கு,செவி என்னும் ஐம்புலன்களையும் அடைக்கி, அவற்றின் மூலம் வெளிப்படும் ஆசைகளை துறந்து. மெய்ப்பொருளாக விளங்கும் இறைவனை நினைத்து, அவரின் ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்கள் இவ்வுலகில் நிலைத்து நீடோடி வாழ்வார்கள்.

நன்றி.