• 8 years ago
சுக்ரன் காதல் கிரகம் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்கிறார். சுக்ரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இப்போது குருவின் வீடான தனுசு ராசியில் சூரியன், சனியோடு இணைந்து சில தினங்கள் கூட்டு குடித்தனம் செய்யப்போகிறார். சுக்கிரன். சுக்ரன் கலை, கலைஞர்களின் நாயகன். ஆடை, அலங்காரத்தின் அதிபதி. ரிஷபம் ராசியும், துலாம் ராசியும் சுக்ரனின் ஆட்சி வீடு... சுக்ரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். கன்னி ராசியில் நீசமடைகிறார்.

சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. அதனால்தான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து அவனுக்கு சுக்கிர திசை நடக்கிறதா என்று கேட்பார்கள். சுக்கிர திசை காலம் ஒருவருக்கு 20 வருடங்கள் நடைபெறும். மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போது சுக்கிர திசையில் பிறந்திருப்பார்கள். அவர்களுக்கு 20 வருடங்கள் நடக்க வாய்ப்பு இருக்காது. அதே நேரம், சனி திசை, கேது திசை காலங்களில் பிறந்தவர்கள், 20 ஆண்டுகள் சுக்கிரதிசையின் யோகங்களை அனுபவிப்பார்கள்.

சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.




Venus transits Vrischika to Dhanu on December 20, 2017 today at 18:43. Venus in Horoscope determines the married life and materialistic comforts of the native. It is exalted in Pisces and debilitated in Virgo, and represents the spouse of a person. The friendly planets of Venus are Mercury, Saturn and Rahu, whereas the Sun and the Moon are considered as its enemies.

Recommended