• 7 years ago
நவகிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்வது இயல்பானதுதான். ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் சூரியன், சுக்கிரன்,புதன் மகர ராசியில் பெயர்ச்சியடைகின்றன. செவ்வாய் கிரகம் தனது வீடான விருச்சிகத்திற்கு இடம் பெயர்கிறது. குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல இந்த கிரகங்களில் பெயர்ச்சிகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் சின்னச் சின்ன சந்தோசங்கங்கள், மகிழ்ச்சியை அளிக்கும். செவ்வாய் கிரகம் தனது சொந்த வீடான விருச்சிகத்தில் வரும் 17ஆம் தேதி குடியேறப்போகிறது. சூரியன் ராஜ கிரகம் மகர மாதத்தில் அமர்கிறது. மகரத்தில் ஏற்கனவே கேது அமர்ந்துள்ளது. சூரியனுடன் இணைந்து இந்த மாதம் சுக்கிரன், புதன் கிரகங்கள் குடித்தனம் நடத்தப் போகின்றன.

ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் உள்ள சூரியன், சுக்கிரன் புதன் பத்தாம் இடத்திற்கு வருகின்றனர். 13ஆம் தேதி சுக்கிரன் பத்தாமிடத்திற்கு வருவதனால் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். 14ம் தேதி சூரியன் பத்தாமிடத்திற்கு வருவது சிறப்பான அம்சம். தொழில் ஸ்தானத்தில் அரச கிரகமான சூரியன் அமர்வதால் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் நெருப்பிடம் ஜாக்கிரதையாக இருக்கவும், லேசான காயம் உண்டாகும். புதன் 28ஆம் தேதி பத்தாமிடத்திற்க்கு வருவது தொழில் சம்பந்தமான படிப்பில் உற்சாகத்தைக் கொடுக்கும்.

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான மகரத்திற்கு வருகிறார். வீட்டில் அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். செவ்வாய் ஏழாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். வீடு, மனை வாங்க முயற்சி செய்யலாம். புதன் 28ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது உயர் கல்வியில் மேன்மை நிலையைக் கொடுக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும்.

Venus transits Dhanu to Makara January 13, 2018.Mars transits Tula to Vrischika January 17, 2018.Mercury transits Dhanu to Makara January 28, 2018.The Vedic legend says that Mercury is the offspring of Jupiter and Moon, hence it has the characteristics of both of these planets.Astrologers could provide you guidance and remedies to stay safe from malicious effects of planetary transits.

Recommended