• 6 years ago
150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் தேதி நிகழ உள்ளது. இது நீல நிலா என்று அழைக்கப்படுகிறது. வானத்தில் பால் போல வட்ட நிலவை பார்த்திருப்போம். சில நேரங்களில் சிவப்பாகவும், ஏன் லேசான மஞ்சள் நிறத்தில் கூட தென்பட்டிருக்கும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றும் போது நிலவின் வடிவத்தில் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. வானில் படிந்துள்ளது எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை காரணமாக நிலவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது. 2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஜனவரி 1ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது.
2018ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

The first eclipse of 2018 will be a lunar one that comes at the very end of the month, on Jan. 31. It will be a total eclipse that involves the second full moon of the month, popularly referred to as a Blue Moon. Such a skywatching event hasn't happened for more than 150 years.

Category

🗞
News

Recommended