சத்தியம் தொலைக்காட்சியின் கேரளத்திற்கு உதவுங்கள் என்ற இயக்கத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தினந்தோறும் ஆதரவு பெருகி வருகிறது. பலர் நிதி வழங்கும்போது, ஆன்லைன் பணபரிமாற்றம் செய்துள்ளனர். அப்போது, முகவரி, பெயர் ஆகியவற்றை குறிப்பிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அத்தகையோர், 98405 77365 என்ற செல்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, பெயர், முகவரி, TRANSACTION ID எனும் பணபரிமாற்ற அடையாள எண், நன்கொடை வழங்கிய தொகை ஆகியவற்றை தெரியப்படுத்தினால், அவர்களுக்கு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு சான்றிதழ் வழங்குவது எளிதாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையில், நிதி வழங்கியோரின் 7- ம் கட்டப்பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது. தொடர்ந்து தினமும் நிதி வழங்கியோர் விவரப்பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Category
🗞
News